Search This Blog

Tuesday, 15 December 2009

நூறு ருபாய் (100௦௦ Rupees )




காலை மணி ஒரு 8இருக்கும் 

தனது மிதி வண்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தான் சேகர்

"அம்மா ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் "

"சாமி கொஞ்சம் சோறு உண்டுட்டு போடா சாமி "

"உன்ற சோத்த நீயே உன்னு , எனக்கெல்லாம் வேண்டாம் .. நான் போறேன் ...கொஞ்சம் காசு குடு..."

"எதுக்கு தங்கோ ?"
"தாமா சொல்றேன் ..."
சில சில்லறைகளை பொருக்கி எடுத்து தந்தாள் அம்மா ...
அதை வாங்கி கொண்டவன் , காசை ஒரு பார்வை பார்த்து விட்டு
தனது புத்தக பையை எடுத்து மிதி வண்டியில் வைத்தான்
காற்று இருக்க என்று பார்த்துவிட்டு கிளம்பினான்
ஒரு , ஒரு கிலோமீட்டர் சென்றிருப்பான்
ஒரு கும்பல் அவனை வழி மறைக்க , மிதி வண்டியை விட்டு இறங்கினான்
யாருமில்லை அவனது நண்பர்கள் தான் ...
"என்னடா நேரத்திலேயே வந்துடீங்க்ள ? "
"இல்ல , உனக்கு அப்புறம் தான் வந்தோம் ... "
"வந்ததே லேட்டு இதுல கேள்வி வேற கேக்ரிய நீ ?"
"டேய் இல்லடா ,லேட் ஆகிடுச்சு ...."
"அதான் தெரியுதே ... "
:"டேய் அப்ரம்ட சேகர் , எவ்ளோ காசு கொண்டு வந்த ? "
"காசா ! இந்த டா "
என்று சில சில்லரைகலையில் எடுத்து நீட்டினான்
உடனே எழுந்தது குபீர் என்ற அந்த சிரிப்பு சத்தம்
"டேய் என்னடா ஏழு ரூபா கொண்டு வந்திருக்க ? "
"ஏன்டா ? "
"டேய் நம்ம சந்துரு எவ்ளோ எடுத்துட்டு வந்திருக்கான் தெரியுமா ?"
"500 ருபாய் "
"வேலன் 400 ருபாய்"
"அப்புறம் நான் ஒரு 400 , பாலா 300 "
"நீ என்னடா ஏழு ரூபா கொண்டு வந்திருக்க ?"
மீண்டும் கூட்டத்தோடு சிரிப்பு ..

"டேய் எங்க வீட்ல காசு இல்லடா "
"வீட்ல அப்படிதான் சொல்லுவாங்க , அதெல்லாம் கேக்ற விதத்துல கேக்கணும் "
"என்னனு ?"
"அப்டி வா , இப்போ வீட்டுக்கு போய் நான் சொல்ற மாதிரி சொல்லி கேளு ....."
என்றவாறு எதோ சொல்லி விட்டான்....


அதை கேட்டுக்கொண்ட சேகர் ஒரு மணி நேரம் கழித்து  வீட்டிற்க்கு மீண்டும் சென்றான்


மகன் ஏன் திரும்பி வந்தான் என்று அம்மா புரியாமல் நிற்க , விறு விறு வென்று சென்ற  சேகர் 
"அம்மா எனக்கு ஒரு 300 ருபாய் வேண்டும் " என்றான்...
"எதுக்குடா 300"
 'அம்மா எங்க ஸ்கூல ஒரு புக் வாங்க சொன்னங்க மா  ,அந்த புக்கோடா விலை 300 ருபாய் ம , அந்த புக் இல்லாததாள என்ன வீட்டுக்கு அனுபிட்டங்க மா "
என்று  று ஒரு கதையா கட்டினான் ...
"அம்மா சீக்கிரம் தாமா , எனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது .."
"டேய் இப்போ அவ்ளோ காசு இல்லடா ... :"
"சரி எவ்ளோ தான் இருக்கு ?"
"100 ருபாய்  தான் இருக்கு , அதுவும் இன்னிக்கு  ஆஸ்பத்திரிக்கு போகணும் , எனக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது டா. " 
"அதெல்லாம் எனக்கு தெரியாது ... எனக்கு 300 ருபாய் வேணும் , யாரவது கிட்ட வாங்கியாவது தாங்க .."
"யாருகிட்ட டா பொய் கேக்கறது .... சரி வா "
.
தன் மகனை பக்கத்துக்கு  வீட்டுக்கு அழைத்து சென்றால் ....
"கலா அக்கா.... கலா.... அக்கா ..."
கலா பாகத்து வீட்டு காரங்க 


"என்ங்க ? "
"அது ஒன்னும் இல்ல , பையன் எதோ புக் வாங்கனும்னு சொல்றன் , ஒரு 300 ருபாய் இருந்த கொடுங்க ... "
"300 !!!!! ஆ , அவ்ளோ எல்லாம் இல்லைங்க "
"காசு வந்ததும் திரிப்பி கொடுதறோம் , கொஞ்சம் இருந்த கொடுங்க ..."
"ஏங்க வெச்சுகிட்ட இல்லன்னு சொல்லுவாங்க , இப்போ நிஜமா காசு இல்லைங்க ... "
"ஒரு 100  ருபாய் ஆவது இருந்தாஆஅ "


"சரி பாக்கிறேன் ... "
உள்ளே சென்று வந்த கலா நூறு ருபாய் கொண்டு வந்து கொடுத்தாள் ....


கொடுத்து விட்டு , ஏதோ முனு முனுதால் கலா ,
"இவங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே வேலைய போச்சு ...., ஏற்கனவே வாங்கின 800 ருபாய் கொடுக்க வழிய காணோம் , இப்போ வேற முன்னுறு வேணுமாம் .... " என்று சேகரையும் அவன் அம்மாவையும் பார்த்து கடிந்தால் "
அது சேகரின் அம்மா கத்தில் விழுந்தும் , அவங்க ஒன்றும் கேட்க வில்லை , அவர்கள் நிலை அப்படி ....


வீட்டில் இருந்த நூறு ரூபாயோடு  சேர்த்து இருநூறு ரூபாயாக சேகரிடம் கொடுத்து அனுப்பினால் அம்மா 


எதோ படபடப்புடன் அதை வாங்கி கொண்டு கிளம்பினான் ,
பார்த்து போடா என்று அம்மா சொன்னது அவன் காதுகளில் விழுந்தது போல தெரியவில்லை 

சரி இவனும் , இவனது நண்பர்களும் காசோடு எங்கு செல்கின்றனர் ????


வேகமாக மிதி வண்டியை அழுத்தி சென்று தன் நண்பர்களுடன்  இணைந்தான்  


"என்னடா  காசு வாங்கிட்டாய  ?"


"வாங்கிட்டேன், ஆனா இருநூறு ருபாய் தான் கிடைத்தது .."
"அட போடா டேய் நீ ஒழுங்கா கேட்ருக்க மாட்ட .. "
"நீங்க நிறுத்துங்க , நானெல்லாம் நல்ல படியத்தான் கேட்டேன் "
"சரி சரி , நம்ம என்ன கிளம்பலாமா ?"


"ஆமா சேகர் , நீ எதுக்குடா பேக்    , புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்க ? , நம்ம என்ன ஷ்கூலுகா  போறோம் ?"


"டேய் , மறுபடியும் என்னால வீடுகேல்லாம்  கீலம் போயிடு வர முடியாது ..."
"டேய் இருக்கட்டும் விடுங்க டா , ஆபத்தில் அதுவும் உதவும் "...


"என்னது ?"
"ஒன்னும் இல்லடா சேகரு , வா போலாம் ..."


அவர்கள் ஐந்து பெரும் , ஒரு பேருந்தில் ஏறுகின்றனர் ....
எது ஒரு இடத்தின் பெயரை சொல்லி  டிக்கெட் வாங்கி கொண்டனர் ...


பின்னர்  ஒரு இரண்டு மணி நேர பயனதிருக்கு பின்னர் எதோ ஒரு இடத்தில இறங்கினர் 


அங்கு ஒரு கடையில் 
சிகறேத்ட்  , பான் பராக் , பீட , ..... 
என்று ஏகப்பட்ட  சமாச்சரங்களை வாங்கி , சேகரின் புத்தகங்களுள் ஒன்றாக வைத்து பாக் செய்தனர் ...


பின்னர் அப்படியே , ஒரு திரை அரகிர்க்கு சென்றனர் அங்கு சிலமணி நேரங்கள் கழித்த பின்னர் ...


இரவு நேரம் வந்தது ...


ஐந்து பெரும் ஒரு மது கடைக்கு சென்றனர் , கையில் இருந்த அதனை காசுக்கும் மதுவை வாங்கி தள்ளினர் ..
மேலும் வாங்க காசு பற்ற வில்லை என , சேகரின் புத்தகத்தையும் விற்று விட்டனர் , (இதுதா ஆபத்தில் உந்தவுவதோ !!!!)


எல்லாம் முடித்து விட்டு , இரவு பாத்து மணி அளவில் சாலையில் ரவுசு பண்ணிட்டு போனாங்க 
நம்ம காவல் துறை சும்மா இருக்குமா ....
கூடவே கூட்டிட்டு போய்டாங்க 


அப்புறம் ஒரு நாள் கழிச்சு அவங்களே விட்டுடாங்க ...


அப்புறம் அவங்களுக்கு எங்க போறது என்ன பண்றதுன்னு தெரியல , கையில காசும் இல்ல ...
ஆனா எப்படியாவது வீடு போய் சேரணுமே ...






வேறு வழியின்றி ,இனி லிப்ட்  கேட்டுதான்டுதான் வீடு போகணும்னு நிலைமை ,..
ஒவ்வொருத்தனும் தனி தனிய லிப்ட் கேட்டு எப்படியோ கிளம்பிட்டாங்க ...


சேகருக்கும் ஒருத்தன் சிக்கினான் ...
அவனும் எப்படியோ பலரிடம் உதவி கேட்டு , ஊரு வந்து சேர்ந்தான்...
அவன் திரும்பி வர ஏறத்தாழ மூன்று நாட்கள் ஆகின 
மூன்றாம் நாள் இரவுதான் வந்து சேர்ந்தான் 


நேராக வீட்டுக்கு சென்றான் , வீடு பூட்டி இருந்தது ....
அவனுக்கு ஒன்னும் புரியவில்லை 
பக்கத்துக்கு வீட்டில் சென்று அழைத்து பார்த்தான் , யாரும் பதில் தர வில்லை...
எதுவும் புரியாமல் வெளியிலேயே படுத்து தூங்கி விட்டன...


காலையில் ஒரு உருவம் அவனை தட்டி எழுப்பியது ....
கண் விளித்து பார்த்தான் ...
அவங்க வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் சொந்த காரர் .. 


"தம்பி எப்போ வந்த ?"
"நேத்து நைட் ..."
"ம்ம்ம்..."
"அம்மா எங்க , வீட்ட ஏன் பூட்டி வச்சிருக்கீங்க ? "
"இன்னும் உனக்கு தெரியாத ?"
"என்னங்க ?"
"அது... அது வந்து .... கஷ்ட படாதப்பா .....
உங்க அம்மா .... , உங்க அம்மா இறந்துட்டாங்க "
"எங்க விளையாடாதீங்க "
"நீ எங்க போன இதனை நாள் ?"
"அம்மா எங்கனு முதல சொல்லுங்க "
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலப்பா "
"அம்மா எங்கனு சொல்லுங்க , எனக்கு பயமா இருக்கு ..."
"நீ வருவிய்னு பார்த்துகிட்டு ரெண்டு நாள் வச்சிர்ந்தோம் , ஆனா நீ வரல , அப்புறம் வாசம் அடிக்க ஆரம்பிச்சிருச்சு .. அதான் இனிக்கு காலைல ....."


"எங்க என்னங்க ஆச்சு எங்க அம்மாவுக்கு ? "


"மூணு  நாள் முன்னாடி  காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னன்கலாம் , அதனால வேலைக்கு கூட போல ... "
"அப்புறம் அடுத்த நாள் , வந்து ஆளுங்க வேலைக்கு கூப்டிருக்காங்க ... பதில காணோம் .. போய் பார்த்த ....."


தனது மருத்துவ செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயை அன்று தனக்கு கொடுத்ததை அப்போதுதான் உணர்ந்தான் அந்த கிறுக்கன் ...


"பரம் , உங்க அம்மா இங்க இருக்கும் போதே இந்த வீட்டுக்கு பல மாசம் வாடகை தரல , இனியும் இந்த வீட்ட சும்மா விட முடியாது .. அதான் வேற ஒருத்தருக்கு வித்துட்டேன்...
நீயும் உன்னோட போராளி எடுத்துட்டு வேற எங்கயாது போயிரு  "என்றார் வீட்டின் உரிமையாளர் ...


"நான் இனி எங்கிங்க போவேன் எனக்குனு இனி யாரு இருக்காங்க ....".
"நூறு ரூபாய்க்காக அம்மாவை கொன்று விட்டேனே  " என்று கூறி கதறி அழுதான் ....


"அம்மா இனிமேல் உன்கிட்ட காசு கேட்க மாட்டேன் , நல்ல படிப்பேன் அம்மா , நீ வாம்மா " என்று அழுது கதறினான் 
பயனில்லை ...
வீணானது அவனது கண்ணீர் மட்டுமே ....
இறந்தவர் மீள்வதும் இல்லை 
இருப்பவர் கேட்பதும் இல்லை 


இனிமேல் அவன் படித்தாலும் அதை பார்த்து ரசிக அவன் தாய் இல்லை ...
யாரும் இருக்கும் பொது அவர்கள் அருமை தெரியாது 
இறந்த பின்னர்  நம்மையே அவர்களுக்கு தெரியாது 


"நூறு ரூபாய்க்காக அம்மாவை கொன்று விட்டேனே " என்றான் ...
இங்கு குற்றம் யாருடையது என்று யாருக்கும் தெரியாது 
அனால் எங்கோ தவறு உள்ளது ....


என்றும் யாரும் உங்கள் பெற்றோர்களை காயபடுதாதீர்கள் 
மாணவ பருவத்தை தேவையின்றி வீணாக வேண்டாம் ..


உங்களை நம்பி நாளைய உலகமே உள்ளது ....


நாளை நமதே 
கோவை தமிழன் 













2 comments: