Search This Blog

Sunday 27 November 2011

< அன்னையின் அன்பு > < Love Of Mother >


கண்களில் கதைகள் சொன்னவளே ...
புவி பெண்களில் சிறந்தவள் நீ என்பேன் ....
முதல் முதலாய் என்னை தொட்டவளே ...
எந்தன் முகம் பார்த்து உயிர் பெற்றவளே ...
என் காலாலே உன்னை எட்டி உதைத்தும் ...
எந்தன் கரம் பிடித்து என்னை கட்டி அணைத்தாய் ...
முகம் எங்கும் நீ முத்தமிட்டாய் ...
ச்சீ... எச்சில் என்று நான் தட்டி விட்டேன் ...
தொட்டில் கட்டி தாலாட்டி ...
தாகம் தீர பாலூட்டி ...
தேனும் பழமும் கலந்தளிது ....
தேகம் வளர வழி செய்தாய் ...
இளைப்பாற மடி கொடுத்து ....
இசை பாடி உறங்க வைத்தாய் ....
நான் துடித்தால் நீ அழுதாய் ...
நீ அழுதால் நான் துடிப்பேன் ....
வெயில்லினிலே வேர்த்த எனக்கு ...
கைகளாலே காற்றடிதாய் ....
கண் கலங்கி நான் நிற்க ,
காற்றை கையில் பிடித்து  வைப்பாய்
தூசி விழ கூடாதென்று ...
மழை துளியில் நான் நனைந்தால் ,
மரமாகி குடை பிடிப்பாய் ....
பத்து மாதம் என்னை சுமந்தெடுதாய் ...
செத்து போகும் வரை உன்னை சுமந்திருப்பேன் ...
என்னை உயிர் எழுத்து எழுத வைத்தாய் ...
உந்தன் உயிராக நான் இருப்பேன் ....
நிலா சோறு ஊட்டி விட்டாய் ...
உந்தன் நிழலாக நான் இருப்பேன் ...
ஆலயங்கள் அழைத்து சென்றாய் ,
அம்மன் தானென்று தெரியாதவளே ....
பள்ளிக்கூடம் கண்டதில்லை நீ ,
என்னை படிப்படியாய் படிக்க வைத்தாய் ...
படிப்பறிவு ஏதும் இல்லை உனக்கு ,
என்னை பக்குவமாய் பார்த்துக்கொண்டாய் ...
எட்டாத வானுக்கும் ஏணி வைத்து ,
ஏழு வண்ண வானவில்லை எட்டிப்பிடித்து ,
சூடான சூரியனை பேனாவாக்கி ...
வெள்ளை நிற வெண்ணிலவே மையாக ...
பால் வீதியில் படலமைப்பேன் ...
என் அன்னையின் அன்பை பற்றி ....

-----
சந்தோஷ்
http://kovaitamilan.co.cc
-----

Wednesday 12 January 2011

தனிமை < Thanimai >

நீ எனக்கு இல்லை என்று தெரிந்தும் , உனக்காக கண்ணீர் விட்டது என் கண்கள் ....
உனக்காக கண்ணீர் சிந்திய என் கண்களை கண்ணாடியில் பார்க்கும் போது ,
என் கரு விழிகளின் ஓரத்தில் காலம் கற்பித்த உண்மைகள் கண்ணீராய் கலங்கி  ,பனியின் சிறு துளி போல கண் சிமிட்டாமல் சிந்துகின்றன ....
என்னை  விலகி விட்ட பிறகும் உன்னை விரும்புவது என் தவறா .... 
இல்லை என்னை விட்டு சென்றது உன் தவறா ...
நாம் சந்தித்து கொண்டது  காலத்தின் தவறா ?
தவறுகளை கண்டறிந்து தண்டனை தர போவதில்லை.
நாட்கள் நகர்ந்து செல்ல , நினைவுகள் மறந்து போகலாம்.
இன்று நிஜங்களாக நம் முன் இருப்பவை , நாளை நிழல்களாக பின்னால் போகலாம் ...
இன்று உன்னை மறக்க நேரம் இல்லாத எனக்கு , காலத்தின் கட்டாயத்தால் ஒரு நாள் உன்னை நினைக்கவும் நேரம் இருக்காது ....
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள்  எல்லாம் நீடிக்க வேண்டும் என்று விரும்பிய எனக்கு இனிமேல்  தனிமைதான் நீடிக்குமோ ...
உன்மேல் பாசம் வைத்து பழகிய பாவத்துக்காக நீ தந்த பரிசு இந்த தனிமை ....
தனிமை என்றும் வெறுமையை தருவதில்லை ...
தன்னம்பிக்கை தருகிறது ...
நீ இல்லாமலும் வாழ முடியும் என்று ....
உன்னோடு இருந்த இனிமையான காலங்கள் எல்லாம் , 
கற்ப்பனைகலாகவும் , கனவுகளாகவும் என் கண்களுக்குள் புகுந்து கண்ணீராக வேதியல் மாற்றம் பெறுகின்றன ...
தனிமையில் இனிமை காண முடியுமா என்றால் , முடியும் என்பேன்  ....
தனிமையை உணர்த்தும் ஒரு உயிர் உன்னோடு இருந்திருந்தால் .....

Sunday 30 May 2010

சிங்கம் விமர்சனம் ( Singam Movie Review )

இன்னைக்கு சிங்கம் படம் பார்த்தேன் 
அதை பற்றிய என்னோட விமர்சனத்தை எழுத எழுதுகிறேன் ....

சிங்கம் என்று பெயர் போடும் போதே , பார்ப்பவரை பரவச படுத்தும் வகையில் ...
பிரமாண்டமாக டைட்டில்லை  உருவாக்கி உள்ளனர் ...

வில்லனின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது ....
பிரக்காஸ் ராஜ் , வில்லன் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக வருகிறார் ....படத்தில் பெயர் மயில் வாகனம் 

நடிப்பில் எந்த குறையும் இல்லை ...
ஆனால் மற்ற படங்களை போல தான் ....
ஒரு வில்லன் , அவருக்கு ஒரு தம்பி , சுற்றிலும் ஏகப்பட்ட ரௌடிகள் என்று வழக்கமான அதே பின்னணி ...
சென்னை மாவட்டத்தில் , கட்ட பஞ்சாயத்து , கடத்தல் , போன்ற வேலை ...
சென்னைக்கே தான் தான் மன்னன் என்பது போல ...

அடுத்த படியாக நம்ம கதா நாயகன் .... சூர்யா ... படத்தில் பெயர் துறை சிங்கம் 
அறிமுகமே பிரமாண்டமான ஒரு சண்டை காட்சி தான் ...
சண்டை முடிந்தவுடன் வழக்கம் போல சில அறிவுரைகள் அள்ளி தருகிறார் ( அடி வாங்கியவர்களுக்கு )
தன் சொந்த ஊரை விட்டு பிரிய மனம் இல்லாமல் .. அதே ஊரில் தான் தனக்கு பனி நியமனம் வேண்டும் என்று கேட்டு 
சொந்த ஊரிலேயே துணை கண்காணிப்பாளராக  பனி புரிகிறார் ...

அடுத்து நம்ம நாயகி ... படத்தில் பெயர் காவ்யா 
பெரியதாக ஒன்றும் பெரிய அறிமுகம் இல்லை ....
விடுமுறையில் ஊருக்கு தன் தங்கை தந்தையுடன் வருவதாக அறிமுகம் ஆகிறார் ...

அடுத்தாப்ல நம்ம நகைச்சுவை நாயகன் விவேக் ....
அதே காவல் நிலையத்தில் ஏட்டாக அறிமுகம் .... படத்தில் பெயர்  எரிமலை ...
நகைச்சுவை காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம் ...
ஆனால் இசை வெளியீட்டின் போது விவேக் பேசியது மிக மிக அதிகம் ...
அப்படி ஒன்றும் நகைச்சுவை காட்சிகள் சொல்லும் அளவு இல்லை ....
வழக்கம் போல தான் படத்திற்கும் நகைச்சுவை காட்சிகளுக்கும் பெரிதாக ஒன்றும் சம்பந்தம் இல்லை ...

படத்தின் கதை என்று வரும் போது ....
மிக வித்தியாசமாக எல்லாம் ஒன்றும்  தெரியவில்லை ....
ஒரு பெரியவரை பிரக்காஸ் ராஜ் மிரட்டி தரக்குறைவாக  பேச .
அந்த பெரியவர் , அமெரிக்காவில் உள்ள தனது மகனுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு . தற்கொலை செய்து கொள்கிறார் ....
அவரது மகன் கொடுத்த புகாரின் பெயரில் , பிரக்காஸ் ராஜ் கைது செய்யப்பட்டு , நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகிறார் ...
சென்னையில் இருக்கும் அவர் , தூத்துக்குடி காவல் நிலையத்தில் 15 நாட்ட்களுக்கு தினமும் கையெழுத்து இட வேண்டும் என்பது நிபந்தனை ...
அவ்வாறு தூதுக்குடி போகும் போது , நாயகனுடன் மோதல் ...
பின்னர் சென்னைக்கு நாயகன் பனி மாற்றம் ....
மீண்டும் அங்கு வில்லனுடன் மோதல் ...
இவ்வாறு கதை செல்கிறது ....

இவ்வாறு கதையில் ஒன்றும் புதுமை இல்லை ...
திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக உள்ளது ...
அதனால் சலிக்காமல் நம்மை படம் பார்க்க வைக்கிறது ....
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் , பாடல்கள் பரவா இல்லை ....
படத்தில் முக முக்கியமான தூண்கள் என்று சொன்னால் , அது ஒளிப்பதிவும் , படத்தொகுப்பும் தான் ....
படத்தொகுப்பு அருமை ...
அதை தவிர படத்தில் ஆங்காங்கே வரும் , விசுவல் எபக்ட்ஸ் சிறப்பாய்  உள்ளது ...
குறிப்பாக , அறிமுக பாடலுக்கு முன்னால் நாயகன்  ஒரு கால்ப்பந்தை உதைக்க , அது மேலே பறக்கும் காட்சி அருமை ...

படம் முழுக்க முழுக்க ஒரு பொழுது போக்கு படம் ....
எதார்த்தத்தை எதிர்ப்பார்த்தால்  ஏமாற்றம்தான் ....
ஆனால் இது போன்ற படங்களில் எதார்த்தம் தேவை இல்லை தான் ....

மற்ற படி எல்லாம் இதுவரை வந்த படங்களை போல தான் ...
அறிமுக பாடலில் அறிவுரை கூறுகிறார் நாயகன் 
வெளி நாட்டில் இரண்டு டூயட் பாடல்கள் ,
செட் போட்டு ஒரு பாடல் 
கிளைமாக்ஸ்   சண்டை .....
கதையில் வரும் நாயகியின் உடைகளுக்கும் பாடல்களில் வரும் நாயகியின் உடைகளுக்கும் சம்பந்தமே இல்லை ....
அதே போல நாயகிக்கு நடிக்க பெருசா வாய்ப்பு ஒன்னும் இல்ல , காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கிறார் ...

இயக்குனர் ஹரி வசனங்களில் , ஆக்க்ரோசமும் ஆவேசமும் படம் முழுக்க தூவி உள்ளார் ...
சிறந்த திரைக்கதை மூலம் மக்களை தன் வசம் ஈர்க்கும் வல்லவர் ....
ஆனால் படத்தின் கடைசி 15 நிமிடத்தை பார்க்கையில் , அப்படியே சாமி படம் தான் ஞாபகம் வருகிறது ....
அதை தவிர்த்து எதாவது புதுமையை செய்து இருக்கலாம் 
அதை தவிர ...
படத்தில் எங்கும் மொக்கை இல்லை ...(எனக்கு பாடல்கள் பிடிக்கவில்லை )
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லா  விட்டாலும் 
குடும்பத்தோடு பார்க்க கூடிய திரைப்படம்  ....

அப்பரம் , இன்னோன்னு ....
நீங்க கோச்சுக்கப்படாது .....
அனுஷ்க்க கூட அவ தங்கைனு சொல்லி ஒரு பொண்ணு வரும் ..
சொல்ல போனா , அந்த பொண்ணு அனுஷ்காவ விட அழகா இருக்கு ...
அந்த பொண்ண பேசாம நாயகியாய போட்டு இருக்கலாம் ....

இந்த படத்தை பற்றிய என்னோட பார்வை இதுங்க ....
மத்தத நீங்க படம் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க ...
நன்றி .....
கோவை தமிழன் .....

Saturday 3 April 2010

பையா பட விமர்சனம் .. நான் பட்ட கொடுமை ....


முதல் முறையாக ஒரு படத்துக்கு , அதன் முதல் நாள் சென்றேன் .... 
பையா படத்தைதான் சொல்றேன்  .... 
அரைத்த மாவையே அரைத்து வந்து கொண்டு இருக்கும் தமிழ் சினிமாக்கள் மத்தியில் , 
அரைத்த அதே மாவை ஒரு கூட்டமே சேர்ந்து அரைத்து  சந்தையில் விட்டுள்ளனர் 
படம் முழுக்க , Heroism  மின்னி மிளிர்கிறது .... 
படத்தின் முதல் காட்சியில் .... சிவா ஓடற பஸ்ல எல்லாம் ஏற மாட்டானாம்  என்று தொடங்கி ......
கிளைமாக்ஸ் காட்சியில் 20 , 30 முறை இரும்பு கம்பியில் அடி வாங்கிய ஹீரோ , உதடுக்கு பக்கத்தில் ஒரு சின்ன காயம் மட்டும் பெற்று .. எழுந்து அத்தனை ரவுடிகளையும் அடித்து நொறுக்குகிறார் ...
சத்தியமா கடைசி வரை எனக்கு இதுதான் கதை என்று எதுவும் புரியவில்லை .....
பாடல்கள் அருமையாக இருந்தாலும் , சுத்தமாக சமந்தமே இல்லாமல் வருகிறது பாடல் காட்சிகள் ....
இது கூட பரவா இல்லைன்னு பார்த்த , இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சண்டை மட்டும் தான் ....
தமிழ் வசங்களுக்கு இணையான ஹிந்தி மற்றும் தெலுங்கு வசனங்கள் ... 
குடும்பத்தோடு   பார்க்ககலாம்னு  சொல்றீங்க , வசனமே புரியாம எப்படிங்க பார்க்கறது   ... 
வழக்கமான தமிழ் சினிமா போலதான் , பார்க்கவே பயங்கரமா இருக்கும் வில்லன்கள் , 
பெருத்த உருவம் 
Scorpio  வண்டிகள் ....
வில்லனை சுட்டி , இது யாரு தெரியுமா .. இந்த ஊர்லையே பெரிய ரவுடி ...
இவனை எதிர்த்து  நாம உயிர் வாழவே முடியாது ... என்று நாயகனை எச்சரிக்கும் நண்பன் ... 
அதை கேட்டு பயப்படத நாயகன்......
இதயவே எதனை முறை தான் பார்க்கறது .... 

நாயகியை பார்த்த உடனே நாயகனுக்கு காதல் ..
நாயகன் போகும் இடமெல்லாம் நாயகி வருவது ... 
நாயகிக்கு மழை பிடிக்கும் என்று சொன்னவுடன் மழை வருவது .... 
ஹையோ முடியல சாமி ......

பணமும் நேரமும் வீணானது  தான் மிச்சம் .... 

பள்ளிக்கூடம் .....

எதற்காக என்னை மறந்தாயோ தெரியவில்லை 
அதற்காக உன்னை மறக்க விரும்பவில்லை 
உன் முகம் பார்க்க  வேண்டாம் ,
உன் கை பிடிக்க வேண்டாம்
உன் அருகில் இருக்க வேண்டாம்
ஆனால் உன் நினைவுகள் மட்டும் வேண்டும் 
கடைசி வரை சொல்லி கொள்வேன் , நீ என் பள்ளி கூட தோழன் என்று .......

Thursday 1 April 2010

பாசம்

என் கண்களில் தூசி விழ அவள் கண்களில் கண்ணீர் ...
அவள் கண்களில் கண்ணீர் வர , என் இதயம் அழுதது ,
என் தாயின் பாசத்தை எண்ணி .....

Tuesday 15 December 2009

நூறு ருபாய் (100௦௦ Rupees )




காலை மணி ஒரு 8இருக்கும் 

தனது மிதி வண்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தான் சேகர்

"அம்மா ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் "

"சாமி கொஞ்சம் சோறு உண்டுட்டு போடா சாமி "

"உன்ற சோத்த நீயே உன்னு , எனக்கெல்லாம் வேண்டாம் .. நான் போறேன் ...கொஞ்சம் காசு குடு..."

"எதுக்கு தங்கோ ?"
"தாமா சொல்றேன் ..."
சில சில்லறைகளை பொருக்கி எடுத்து தந்தாள் அம்மா ...
அதை வாங்கி கொண்டவன் , காசை ஒரு பார்வை பார்த்து விட்டு
தனது புத்தக பையை எடுத்து மிதி வண்டியில் வைத்தான்
காற்று இருக்க என்று பார்த்துவிட்டு கிளம்பினான்
ஒரு , ஒரு கிலோமீட்டர் சென்றிருப்பான்
ஒரு கும்பல் அவனை வழி மறைக்க , மிதி வண்டியை விட்டு இறங்கினான்
யாருமில்லை அவனது நண்பர்கள் தான் ...
"என்னடா நேரத்திலேயே வந்துடீங்க்ள ? "
"இல்ல , உனக்கு அப்புறம் தான் வந்தோம் ... "
"வந்ததே லேட்டு இதுல கேள்வி வேற கேக்ரிய நீ ?"
"டேய் இல்லடா ,லேட் ஆகிடுச்சு ...."
"அதான் தெரியுதே ... "
:"டேய் அப்ரம்ட சேகர் , எவ்ளோ காசு கொண்டு வந்த ? "
"காசா ! இந்த டா "
என்று சில சில்லரைகலையில் எடுத்து நீட்டினான்
உடனே எழுந்தது குபீர் என்ற அந்த சிரிப்பு சத்தம்
"டேய் என்னடா ஏழு ரூபா கொண்டு வந்திருக்க ? "
"ஏன்டா ? "
"டேய் நம்ம சந்துரு எவ்ளோ எடுத்துட்டு வந்திருக்கான் தெரியுமா ?"
"500 ருபாய் "
"வேலன் 400 ருபாய்"
"அப்புறம் நான் ஒரு 400 , பாலா 300 "
"நீ என்னடா ஏழு ரூபா கொண்டு வந்திருக்க ?"
மீண்டும் கூட்டத்தோடு சிரிப்பு ..

"டேய் எங்க வீட்ல காசு இல்லடா "
"வீட்ல அப்படிதான் சொல்லுவாங்க , அதெல்லாம் கேக்ற விதத்துல கேக்கணும் "
"என்னனு ?"
"அப்டி வா , இப்போ வீட்டுக்கு போய் நான் சொல்ற மாதிரி சொல்லி கேளு ....."
என்றவாறு எதோ சொல்லி விட்டான்....


அதை கேட்டுக்கொண்ட சேகர் ஒரு மணி நேரம் கழித்து  வீட்டிற்க்கு மீண்டும் சென்றான்


மகன் ஏன் திரும்பி வந்தான் என்று அம்மா புரியாமல் நிற்க , விறு விறு வென்று சென்ற  சேகர் 
"அம்மா எனக்கு ஒரு 300 ருபாய் வேண்டும் " என்றான்...
"எதுக்குடா 300"
 'அம்மா எங்க ஸ்கூல ஒரு புக் வாங்க சொன்னங்க மா  ,அந்த புக்கோடா விலை 300 ருபாய் ம , அந்த புக் இல்லாததாள என்ன வீட்டுக்கு அனுபிட்டங்க மா "
என்று  று ஒரு கதையா கட்டினான் ...
"அம்மா சீக்கிரம் தாமா , எனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது .."
"டேய் இப்போ அவ்ளோ காசு இல்லடா ... :"
"சரி எவ்ளோ தான் இருக்கு ?"
"100 ருபாய்  தான் இருக்கு , அதுவும் இன்னிக்கு  ஆஸ்பத்திரிக்கு போகணும் , எனக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது டா. " 
"அதெல்லாம் எனக்கு தெரியாது ... எனக்கு 300 ருபாய் வேணும் , யாரவது கிட்ட வாங்கியாவது தாங்க .."
"யாருகிட்ட டா பொய் கேக்கறது .... சரி வா "
.
தன் மகனை பக்கத்துக்கு  வீட்டுக்கு அழைத்து சென்றால் ....
"கலா அக்கா.... கலா.... அக்கா ..."
கலா பாகத்து வீட்டு காரங்க 


"என்ங்க ? "
"அது ஒன்னும் இல்ல , பையன் எதோ புக் வாங்கனும்னு சொல்றன் , ஒரு 300 ருபாய் இருந்த கொடுங்க ... "
"300 !!!!! ஆ , அவ்ளோ எல்லாம் இல்லைங்க "
"காசு வந்ததும் திரிப்பி கொடுதறோம் , கொஞ்சம் இருந்த கொடுங்க ..."
"ஏங்க வெச்சுகிட்ட இல்லன்னு சொல்லுவாங்க , இப்போ நிஜமா காசு இல்லைங்க ... "
"ஒரு 100  ருபாய் ஆவது இருந்தாஆஅ "


"சரி பாக்கிறேன் ... "
உள்ளே சென்று வந்த கலா நூறு ருபாய் கொண்டு வந்து கொடுத்தாள் ....


கொடுத்து விட்டு , ஏதோ முனு முனுதால் கலா ,
"இவங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே வேலைய போச்சு ...., ஏற்கனவே வாங்கின 800 ருபாய் கொடுக்க வழிய காணோம் , இப்போ வேற முன்னுறு வேணுமாம் .... " என்று சேகரையும் அவன் அம்மாவையும் பார்த்து கடிந்தால் "
அது சேகரின் அம்மா கத்தில் விழுந்தும் , அவங்க ஒன்றும் கேட்க வில்லை , அவர்கள் நிலை அப்படி ....


வீட்டில் இருந்த நூறு ரூபாயோடு  சேர்த்து இருநூறு ரூபாயாக சேகரிடம் கொடுத்து அனுப்பினால் அம்மா 


எதோ படபடப்புடன் அதை வாங்கி கொண்டு கிளம்பினான் ,
பார்த்து போடா என்று அம்மா சொன்னது அவன் காதுகளில் விழுந்தது போல தெரியவில்லை 

சரி இவனும் , இவனது நண்பர்களும் காசோடு எங்கு செல்கின்றனர் ????


வேகமாக மிதி வண்டியை அழுத்தி சென்று தன் நண்பர்களுடன்  இணைந்தான்  


"என்னடா  காசு வாங்கிட்டாய  ?"


"வாங்கிட்டேன், ஆனா இருநூறு ருபாய் தான் கிடைத்தது .."
"அட போடா டேய் நீ ஒழுங்கா கேட்ருக்க மாட்ட .. "
"நீங்க நிறுத்துங்க , நானெல்லாம் நல்ல படியத்தான் கேட்டேன் "
"சரி சரி , நம்ம என்ன கிளம்பலாமா ?"


"ஆமா சேகர் , நீ எதுக்குடா பேக்    , புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்க ? , நம்ம என்ன ஷ்கூலுகா  போறோம் ?"


"டேய் , மறுபடியும் என்னால வீடுகேல்லாம்  கீலம் போயிடு வர முடியாது ..."
"டேய் இருக்கட்டும் விடுங்க டா , ஆபத்தில் அதுவும் உதவும் "...


"என்னது ?"
"ஒன்னும் இல்லடா சேகரு , வா போலாம் ..."


அவர்கள் ஐந்து பெரும் , ஒரு பேருந்தில் ஏறுகின்றனர் ....
எது ஒரு இடத்தின் பெயரை சொல்லி  டிக்கெட் வாங்கி கொண்டனர் ...


பின்னர்  ஒரு இரண்டு மணி நேர பயனதிருக்கு பின்னர் எதோ ஒரு இடத்தில இறங்கினர் 


அங்கு ஒரு கடையில் 
சிகறேத்ட்  , பான் பராக் , பீட , ..... 
என்று ஏகப்பட்ட  சமாச்சரங்களை வாங்கி , சேகரின் புத்தகங்களுள் ஒன்றாக வைத்து பாக் செய்தனர் ...


பின்னர் அப்படியே , ஒரு திரை அரகிர்க்கு சென்றனர் அங்கு சிலமணி நேரங்கள் கழித்த பின்னர் ...


இரவு நேரம் வந்தது ...


ஐந்து பெரும் ஒரு மது கடைக்கு சென்றனர் , கையில் இருந்த அதனை காசுக்கும் மதுவை வாங்கி தள்ளினர் ..
மேலும் வாங்க காசு பற்ற வில்லை என , சேகரின் புத்தகத்தையும் விற்று விட்டனர் , (இதுதா ஆபத்தில் உந்தவுவதோ !!!!)


எல்லாம் முடித்து விட்டு , இரவு பாத்து மணி அளவில் சாலையில் ரவுசு பண்ணிட்டு போனாங்க 
நம்ம காவல் துறை சும்மா இருக்குமா ....
கூடவே கூட்டிட்டு போய்டாங்க 


அப்புறம் ஒரு நாள் கழிச்சு அவங்களே விட்டுடாங்க ...


அப்புறம் அவங்களுக்கு எங்க போறது என்ன பண்றதுன்னு தெரியல , கையில காசும் இல்ல ...
ஆனா எப்படியாவது வீடு போய் சேரணுமே ...






வேறு வழியின்றி ,இனி லிப்ட்  கேட்டுதான்டுதான் வீடு போகணும்னு நிலைமை ,..
ஒவ்வொருத்தனும் தனி தனிய லிப்ட் கேட்டு எப்படியோ கிளம்பிட்டாங்க ...


சேகருக்கும் ஒருத்தன் சிக்கினான் ...
அவனும் எப்படியோ பலரிடம் உதவி கேட்டு , ஊரு வந்து சேர்ந்தான்...
அவன் திரும்பி வர ஏறத்தாழ மூன்று நாட்கள் ஆகின 
மூன்றாம் நாள் இரவுதான் வந்து சேர்ந்தான் 


நேராக வீட்டுக்கு சென்றான் , வீடு பூட்டி இருந்தது ....
அவனுக்கு ஒன்னும் புரியவில்லை 
பக்கத்துக்கு வீட்டில் சென்று அழைத்து பார்த்தான் , யாரும் பதில் தர வில்லை...
எதுவும் புரியாமல் வெளியிலேயே படுத்து தூங்கி விட்டன...


காலையில் ஒரு உருவம் அவனை தட்டி எழுப்பியது ....
கண் விளித்து பார்த்தான் ...
அவங்க வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் சொந்த காரர் .. 


"தம்பி எப்போ வந்த ?"
"நேத்து நைட் ..."
"ம்ம்ம்..."
"அம்மா எங்க , வீட்ட ஏன் பூட்டி வச்சிருக்கீங்க ? "
"இன்னும் உனக்கு தெரியாத ?"
"என்னங்க ?"
"அது... அது வந்து .... கஷ்ட படாதப்பா .....
உங்க அம்மா .... , உங்க அம்மா இறந்துட்டாங்க "
"எங்க விளையாடாதீங்க "
"நீ எங்க போன இதனை நாள் ?"
"அம்மா எங்கனு முதல சொல்லுங்க "
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலப்பா "
"அம்மா எங்கனு சொல்லுங்க , எனக்கு பயமா இருக்கு ..."
"நீ வருவிய்னு பார்த்துகிட்டு ரெண்டு நாள் வச்சிர்ந்தோம் , ஆனா நீ வரல , அப்புறம் வாசம் அடிக்க ஆரம்பிச்சிருச்சு .. அதான் இனிக்கு காலைல ....."


"எங்க என்னங்க ஆச்சு எங்க அம்மாவுக்கு ? "


"மூணு  நாள் முன்னாடி  காய்ச்சல் அடிக்குதுன்னு சொன்னன்கலாம் , அதனால வேலைக்கு கூட போல ... "
"அப்புறம் அடுத்த நாள் , வந்து ஆளுங்க வேலைக்கு கூப்டிருக்காங்க ... பதில காணோம் .. போய் பார்த்த ....."


தனது மருத்துவ செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயை அன்று தனக்கு கொடுத்ததை அப்போதுதான் உணர்ந்தான் அந்த கிறுக்கன் ...


"பரம் , உங்க அம்மா இங்க இருக்கும் போதே இந்த வீட்டுக்கு பல மாசம் வாடகை தரல , இனியும் இந்த வீட்ட சும்மா விட முடியாது .. அதான் வேற ஒருத்தருக்கு வித்துட்டேன்...
நீயும் உன்னோட போராளி எடுத்துட்டு வேற எங்கயாது போயிரு  "என்றார் வீட்டின் உரிமையாளர் ...


"நான் இனி எங்கிங்க போவேன் எனக்குனு இனி யாரு இருக்காங்க ....".
"நூறு ரூபாய்க்காக அம்மாவை கொன்று விட்டேனே  " என்று கூறி கதறி அழுதான் ....


"அம்மா இனிமேல் உன்கிட்ட காசு கேட்க மாட்டேன் , நல்ல படிப்பேன் அம்மா , நீ வாம்மா " என்று அழுது கதறினான் 
பயனில்லை ...
வீணானது அவனது கண்ணீர் மட்டுமே ....
இறந்தவர் மீள்வதும் இல்லை 
இருப்பவர் கேட்பதும் இல்லை 


இனிமேல் அவன் படித்தாலும் அதை பார்த்து ரசிக அவன் தாய் இல்லை ...
யாரும் இருக்கும் பொது அவர்கள் அருமை தெரியாது 
இறந்த பின்னர்  நம்மையே அவர்களுக்கு தெரியாது 


"நூறு ரூபாய்க்காக அம்மாவை கொன்று விட்டேனே " என்றான் ...
இங்கு குற்றம் யாருடையது என்று யாருக்கும் தெரியாது 
அனால் எங்கோ தவறு உள்ளது ....


என்றும் யாரும் உங்கள் பெற்றோர்களை காயபடுதாதீர்கள் 
மாணவ பருவத்தை தேவையின்றி வீணாக வேண்டாம் ..


உங்களை நம்பி நாளைய உலகமே உள்ளது ....


நாளை நமதே 
கோவை தமிழன் 













Thursday 5 November 2009

Science Teacher: Oxygen is a must for breathing & for life. It was discovered in 1773.

Student : Thank God ! I was born after that otherwise, I would have died .

Monday 2 November 2009

Be Talented

Be talented infront of everyone!

But always be fool infront of your dears!

Thats always something  Special...

Sunday 1 November 2009

Love And Life

"Dont spoil life in love,but don't miss love in life.."
Only Brilliants can understand this correctly.