முதல் முறையாக ஒரு படத்துக்கு , அதன் முதல் நாள் சென்றேன் ....
பையா படத்தைதான் சொல்றேன் ....
அரைத்த மாவையே அரைத்து வந்து கொண்டு இருக்கும் தமிழ் சினிமாக்கள் மத்தியில் ,
அரைத்த அதே மாவை ஒரு கூட்டமே சேர்ந்து அரைத்து சந்தையில் விட்டுள்ளனர்
படம் முழுக்க , Heroism மின்னி மிளிர்கிறது ....
படத்தின் முதல் காட்சியில் .... சிவா ஓடற பஸ்ல எல்லாம் ஏற மாட்டானாம் என்று தொடங்கி ......
கிளைமாக்ஸ் காட்சியில் 20 , 30 முறை இரும்பு கம்பியில் அடி வாங்கிய ஹீரோ , உதடுக்கு பக்கத்தில் ஒரு சின்ன காயம் மட்டும் பெற்று .. எழுந்து அத்தனை ரவுடிகளையும் அடித்து நொறுக்குகிறார் ...
சத்தியமா கடைசி வரை எனக்கு இதுதான் கதை என்று எதுவும் புரியவில்லை .....
பாடல்கள் அருமையாக இருந்தாலும் , சுத்தமாக சமந்தமே இல்லாமல் வருகிறது பாடல் காட்சிகள் ....
இது கூட பரவா இல்லைன்னு பார்த்த , இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சண்டை மட்டும் தான் ....
தமிழ் வசங்களுக்கு இணையான ஹிந்தி மற்றும் தெலுங்கு வசனங்கள் ...
குடும்பத்தோடு பார்க்ககலாம்னு சொல்றீங்க , வசனமே புரியாம எப்படிங்க பார்க்கறது ...
வழக்கமான தமிழ் சினிமா போலதான் , பார்க்கவே பயங்கரமா இருக்கும் வில்லன்கள் ,
பெருத்த உருவம்
Scorpio வண்டிகள் ....
வில்லனை சுட்டி , இது யாரு தெரியுமா .. இந்த ஊர்லையே பெரிய ரவுடி ...
இவனை எதிர்த்து நாம உயிர் வாழவே முடியாது ... என்று நாயகனை எச்சரிக்கும் நண்பன் ...
அதை கேட்டு பயப்படத நாயகன்......
இதயவே எதனை முறை தான் பார்க்கறது ....
நாயகியை பார்த்த உடனே நாயகனுக்கு காதல் ..
நாயகன் போகும் இடமெல்லாம் நாயகி வருவது ...
நாயகிக்கு மழை பிடிக்கும் என்று சொன்னவுடன் மழை வருவது ....
ஹையோ முடியல சாமி ......
பணமும் நேரமும் வீணானது தான் மிச்சம் ....
No comments:
Post a Comment