Search This Blog

Sunday, 30 May 2010

சிங்கம் விமர்சனம் ( Singam Movie Review )

இன்னைக்கு சிங்கம் படம் பார்த்தேன் 
அதை பற்றிய என்னோட விமர்சனத்தை எழுத எழுதுகிறேன் ....

சிங்கம் என்று பெயர் போடும் போதே , பார்ப்பவரை பரவச படுத்தும் வகையில் ...
பிரமாண்டமாக டைட்டில்லை  உருவாக்கி உள்ளனர் ...

வில்லனின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது ....
பிரக்காஸ் ராஜ் , வில்லன் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக வருகிறார் ....படத்தில் பெயர் மயில் வாகனம் 

நடிப்பில் எந்த குறையும் இல்லை ...
ஆனால் மற்ற படங்களை போல தான் ....
ஒரு வில்லன் , அவருக்கு ஒரு தம்பி , சுற்றிலும் ஏகப்பட்ட ரௌடிகள் என்று வழக்கமான அதே பின்னணி ...
சென்னை மாவட்டத்தில் , கட்ட பஞ்சாயத்து , கடத்தல் , போன்ற வேலை ...
சென்னைக்கே தான் தான் மன்னன் என்பது போல ...

அடுத்த படியாக நம்ம கதா நாயகன் .... சூர்யா ... படத்தில் பெயர் துறை சிங்கம் 
அறிமுகமே பிரமாண்டமான ஒரு சண்டை காட்சி தான் ...
சண்டை முடிந்தவுடன் வழக்கம் போல சில அறிவுரைகள் அள்ளி தருகிறார் ( அடி வாங்கியவர்களுக்கு )
தன் சொந்த ஊரை விட்டு பிரிய மனம் இல்லாமல் .. அதே ஊரில் தான் தனக்கு பனி நியமனம் வேண்டும் என்று கேட்டு 
சொந்த ஊரிலேயே துணை கண்காணிப்பாளராக  பனி புரிகிறார் ...

அடுத்து நம்ம நாயகி ... படத்தில் பெயர் காவ்யா 
பெரியதாக ஒன்றும் பெரிய அறிமுகம் இல்லை ....
விடுமுறையில் ஊருக்கு தன் தங்கை தந்தையுடன் வருவதாக அறிமுகம் ஆகிறார் ...

அடுத்தாப்ல நம்ம நகைச்சுவை நாயகன் விவேக் ....
அதே காவல் நிலையத்தில் ஏட்டாக அறிமுகம் .... படத்தில் பெயர்  எரிமலை ...
நகைச்சுவை காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம் ...
ஆனால் இசை வெளியீட்டின் போது விவேக் பேசியது மிக மிக அதிகம் ...
அப்படி ஒன்றும் நகைச்சுவை காட்சிகள் சொல்லும் அளவு இல்லை ....
வழக்கம் போல தான் படத்திற்கும் நகைச்சுவை காட்சிகளுக்கும் பெரிதாக ஒன்றும் சம்பந்தம் இல்லை ...

படத்தின் கதை என்று வரும் போது ....
மிக வித்தியாசமாக எல்லாம் ஒன்றும்  தெரியவில்லை ....
ஒரு பெரியவரை பிரக்காஸ் ராஜ் மிரட்டி தரக்குறைவாக  பேச .
அந்த பெரியவர் , அமெரிக்காவில் உள்ள தனது மகனுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு . தற்கொலை செய்து கொள்கிறார் ....
அவரது மகன் கொடுத்த புகாரின் பெயரில் , பிரக்காஸ் ராஜ் கைது செய்யப்பட்டு , நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகிறார் ...
சென்னையில் இருக்கும் அவர் , தூத்துக்குடி காவல் நிலையத்தில் 15 நாட்ட்களுக்கு தினமும் கையெழுத்து இட வேண்டும் என்பது நிபந்தனை ...
அவ்வாறு தூதுக்குடி போகும் போது , நாயகனுடன் மோதல் ...
பின்னர் சென்னைக்கு நாயகன் பனி மாற்றம் ....
மீண்டும் அங்கு வில்லனுடன் மோதல் ...
இவ்வாறு கதை செல்கிறது ....

இவ்வாறு கதையில் ஒன்றும் புதுமை இல்லை ...
திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக உள்ளது ...
அதனால் சலிக்காமல் நம்மை படம் பார்க்க வைக்கிறது ....
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் , பாடல்கள் பரவா இல்லை ....
படத்தில் முக முக்கியமான தூண்கள் என்று சொன்னால் , அது ஒளிப்பதிவும் , படத்தொகுப்பும் தான் ....
படத்தொகுப்பு அருமை ...
அதை தவிர படத்தில் ஆங்காங்கே வரும் , விசுவல் எபக்ட்ஸ் சிறப்பாய்  உள்ளது ...
குறிப்பாக , அறிமுக பாடலுக்கு முன்னால் நாயகன்  ஒரு கால்ப்பந்தை உதைக்க , அது மேலே பறக்கும் காட்சி அருமை ...

படம் முழுக்க முழுக்க ஒரு பொழுது போக்கு படம் ....
எதார்த்தத்தை எதிர்ப்பார்த்தால்  ஏமாற்றம்தான் ....
ஆனால் இது போன்ற படங்களில் எதார்த்தம் தேவை இல்லை தான் ....

மற்ற படி எல்லாம் இதுவரை வந்த படங்களை போல தான் ...
அறிமுக பாடலில் அறிவுரை கூறுகிறார் நாயகன் 
வெளி நாட்டில் இரண்டு டூயட் பாடல்கள் ,
செட் போட்டு ஒரு பாடல் 
கிளைமாக்ஸ்   சண்டை .....
கதையில் வரும் நாயகியின் உடைகளுக்கும் பாடல்களில் வரும் நாயகியின் உடைகளுக்கும் சம்பந்தமே இல்லை ....
அதே போல நாயகிக்கு நடிக்க பெருசா வாய்ப்பு ஒன்னும் இல்ல , காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கிறார் ...

இயக்குனர் ஹரி வசனங்களில் , ஆக்க்ரோசமும் ஆவேசமும் படம் முழுக்க தூவி உள்ளார் ...
சிறந்த திரைக்கதை மூலம் மக்களை தன் வசம் ஈர்க்கும் வல்லவர் ....
ஆனால் படத்தின் கடைசி 15 நிமிடத்தை பார்க்கையில் , அப்படியே சாமி படம் தான் ஞாபகம் வருகிறது ....
அதை தவிர்த்து எதாவது புதுமையை செய்து இருக்கலாம் 
அதை தவிர ...
படத்தில் எங்கும் மொக்கை இல்லை ...(எனக்கு பாடல்கள் பிடிக்கவில்லை )
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லா  விட்டாலும் 
குடும்பத்தோடு பார்க்க கூடிய திரைப்படம்  ....

அப்பரம் , இன்னோன்னு ....
நீங்க கோச்சுக்கப்படாது .....
அனுஷ்க்க கூட அவ தங்கைனு சொல்லி ஒரு பொண்ணு வரும் ..
சொல்ல போனா , அந்த பொண்ணு அனுஷ்காவ விட அழகா இருக்கு ...
அந்த பொண்ண பேசாம நாயகியாய போட்டு இருக்கலாம் ....

இந்த படத்தை பற்றிய என்னோட பார்வை இதுங்க ....
மத்தத நீங்க படம் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க ...
நன்றி .....
கோவை தமிழன் .....

2 comments: